Refund policy

ரிட்டர்ன் & ரீஃபண்ட் கொள்கை

 

பைக் கேர் மற்றும் இன்ஜின் ஆயில்களைத் திருப்பி அனுப்ப முடியாது:

       I.            இந்தப் பொருள் நுகர்வுப் பொருள் என்பதால் திருப்பி அனுப்ப முடியாது. இருப்பினும், அரிதாக சேதமடைந்த, குறைபாடுள்ள அல்லது வேறு பொருள் உங்களுக்கு டெலிவரி செய்யப்பட்டால், பொருந்தும்படி முழு ரீஃபண்ட் அல்லது இலவச மாற்றுப் பொருள் வழங்குவோம்.

    II.            ரீஃபண்ட்/மாற்றுப் பொருள் வழங்கும் முன், பொருளில் உள்ள சேதம் அல்லது குறைபாட்டை உறுதிப்படுத்த நாங்கள் உங்களைத் தொடர்புகொள்ளலாம்.

 

பைக் பாகங்கள் & அக்சஸரீஸ் ரிட்டர்ன் கொள்கை:

2 நாள் ரிட்டர்ன் கொள்கை:

       I.            டெலிவரியிலிருந்து 2 நாட்களுக்குள் இந்தப் பொருளை  மாற்றிக்கொள்ளலாம் (பார்சல் சேதமடைந்து அல்லது தவறான பொருள் வந்திருந்தால் )

    II.            டெலிவரியிலிருந்து 12 மணி நேரத்திற்குள் முழு ரீஃபண்டுக்காகப் பொருளைத் திருப்பி அனுப்பலாம் (எங்கள் தரப்பில் தவறு நடந்திருந்தால் மட்டுமே இது பொருந்தும் ) . பார்சல் எங்களுக்கு/நிறுவனத்துக்கு (KP Racing System) வந்து சேர்ந்த பின் 6 முதல் 7 வேலை நாட்களுக்குள் ரீஃபண்ட் தொகை உங்கள் கணக்கில் செலுத்தப்படும். எனவே ரிட்டர்ன் பிக்-அப் வெற்றிகரமாக நடைபெற, பொருளை அதன் அசல் நிலையில், பிராண்ட் வெளிப்பெட்டி, இணைக்கப்பட்ட MRP டேக்குகள், பயனர் கையேடு, வாரண்டி கார்டுகள் மற்றும் உற்பத்தியாளர் பேக்கேஜிங்கில் உள்ள அசல் அக்சஸரீஸுடன் வைத்திருக்கவும்.

 III.            ரீஃபண்ட்/மாற்றுப் பொருள் வழங்கும் முன், பொருளில் உள்ள சேதம் அல்லது குறைபாட்டை உறுதிப்படுத்த நாங்கள் உங்களைத் தொடர்புகொள்ளலாம்.

 

 ரீஃபண்ட் கொள்கை :


ஆர்டர் ரத்து தொடர்பாக முக்கியக் கவனத்திற்கு ,

ஆர்டர் ஸ்டேட்டஸ் கன்ஃபர்ம்டு நிலையிலிருந்து ஆன் டெலிவரி நிலைக்கு மாறியவுடன் இந்த நிலையில் நீங்கள் எந்தக் காரணத்திற்காக ஆர்டரை ரத்து செய்தாலும், நிறுவனம் நீங்கள் செலுத்திய 20% தொகையைத் திருப்பித் தருவதாக உறுதியளிக்கவில்லை ,

2  : - உங்கள் ரிட்டர்ன் எங்களுக்குக் கிடைத்தவுடன், சூழ்நிலைக்கு ஏற்ப, ரீஃபண்ட் அசல் பேமென்ட் முறைக்கு (ப்ரீ-பெய்டு                   பரிவர்த்தனைகள் எனில்) அல்லது உங்கள் வங்கிக் கணக்குக்கு (பே ஆன் டெலிவரி ஆர்டர்கள் எனில்) வழங்கப்படும். நிபந்தனைகள் பொருந்தும் **

 

 

 

Ø ரீஃபண்ட் காலக்கெடு:

 

வெவ்வேறு பேமென்ட் முறைகளுக்கான ரீஃபண்ட் காலம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

 

கிடைக்கும் ரீஃபண்ட் முறை         ரீஃபண்ட் காலக்கெடு

a.     ப்ரீ-பெய்டு ஆர்டர்கள்: 6-7 வேலை நாட்கள்

b.     கிரெடிட் கார்டு/ டெபிட் கார்டு:         6-7 வேலை நாட்கள்

c.      நெட் பேங்கிங் கணக்கு (வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்)

d.     UPI இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கு: 6-7 வேலை நாட்கள்

e.      பே ஆன் டெலிவரி ஆர்டர்கள்:

f.       வங்கிக் கணக்குக்கு NEFT:         6-7 வேலை நாட்கள்

 

மேலே உள்ள அட்டவணையில் குறிப்பிட்ட நிலையான காலக்கெடு முடிந்தும் உங்களுக்கு ரீஃபண்ட் கிடைக்கவில்லை என்றால், மேலும் தகவலுக்கு உங்கள் கிரெடிட் அல்லது டெபிட் கார்டு வழங்குநரை அல்லது உங்கள் வங்கியைத் தொடர்புகொள்ளவும். ரீஃபண்டுகள் ரொக்கமாக வழங்கப்படாது. விதிவிலக்கான சந்தர்ப்பங்களில் மட்டுமே காகிதக் காசோலை மூலம் ரீஃபண்ட் வழங்கப்படலாம்.

 

KP Racing System மூலம் நிறைவேற்றப்படும் ஆர்டர்களுக்கு:

 

1. வாங்கும்போது பேமென்ட் செய்ய நீங்கள் பயன்படுத்திய பேமென்ட் முறை (கிரெடிட்/ டெபிட் கார்டு போன்றவை) இப்போது செல்லுபடியாகவில்லை என்றால், டிமாண்ட் டிராஃப்ட் மூலம் ரீஃபண்ட் வழங்கப்படும்.

 

2. உங்கள் வங்கியிடமிருந்து பேமென்ட் தோல்வி அறிவிப்பு எங்களுக்கு வந்தால், டிமாண்ட் டிராஃப்ட் மூலம் ரீஃபண்ட் வழங்கப்படும்.

 

எங்களை அழைத்து, டிமாண்ட் டிராஃப்ட் அனுப்பப்பட வேண்டிய உங்கள் பெயர் மற்றும் முகவரியைத் தெரிவிக்குமாறு கேட்டு உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புவோம். இந்த விவரங்கள் கிடைத்தவுடன் ரீஃபண்ட் தொடங்கப்படும்.

 

 

 

 

 

 

 

 

 

விற்பனையாளர் நிறைவேற்றும் ஆர்டர்களுக்கு:

 

1. சேதமடைந்த/ குறைபாடுள்ள பொருட்களைப் பழுதுபார்க்கவோ மாற்றவோ முடியாவிட்டால், விற்பனையாளர் ரீஃபண்ட் வழங்குவார்.

 

2. ரீஃபண்ட் தேவைப்படும் எந்தச் சூழ்நிலையிலும், விற்பனையாளர்(கள்) அந்த ரீஃபண்டுக்கு அங்கீகாரம் அளிக்க வேண்டும். பொருள் கிடைத்ததை விற்பனையாளர் எங்களுக்குத் தெரிவிக்கும்போது மட்டுமே KP Racing System உங்களுக்கு ரீஃபண்டுகளை எளிதாக்க உதவ முடியும். ரிட்டர்ன் பொருள் கிடைத்ததை விற்பனையாளர் எங்களுக்குத் தெரிவித்தவுடன், ரீஃபண்டுகளைச் செயலாக்க மேலே உள்ள ரீஃபண்ட் காலம் பொருந்தும்.

 

பே ஆன் டெலிவரி ஆர்டர்களுக்கான ரீஃபண்ட்:

பே ஆன் டெலிவரி ஆர்டர்களுக்கு, ரீஃபண்ட் உங்கள் வங்கிக் கணக்குக்கு வழங்கப்படும்.

 

பே ஆன் டெலிவரி ஆர்டரின் ரீஃபண்டை உங்கள் வங்கிக் கணக்கில் பெற விரும்பினால், Your Account பகுதியில் அல்லது பொருளைத் திருப்பி அனுப்பும்போது Returns Centre-இல் வங்கிக் கணக்கு விவரங்களைப் புதுப்பிக்கலாம்.

 

குறிப்பு: மூன்றாம் தரப்புக் கணக்குகளுக்கு ரீஃபண்ட் வழங்க முடியாது. உங்கள் KP Racing System அக்கவுண்ட்டில் உள்ள பெயர், வங்கிக் கணக்கு வைத்திருப்பவரின் பெயருடன் பொருந்த வேண்டும்.

 

வேறு ஏதேனும் நகரத்தில் காசோலையை நேரில் செலுத்த திட்டமிட்டால், உங்கள் பயனாளி வங்கி அந்தக் காசோலையை வெளியூர் கிளியரிங்கிற்கு அனுப்புவதை உறுதிசெய்யவும்.

 

உங்கள் காசோலையை கிளியரன்ஸ் பெட்டியில் போடத் திட்டமிட்டால், பின்வருவனவற்றைக் கவனிக்கவும்:

 

- மேலே குறிப்பிட்ட நகரங்களில் ஏதேனும் ஒன்றில் கிளியரன்ஸ் பெட்டியில் காசோலையைப் போடுகிறீர்கள் என்றால், Local Cheques எனக் குறிக்கப்பட்ட பெட்டியைப் பயன்படுத்தவும்.

 

- வேறு ஏதேனும் நகரத்தில் கிளியரன்ஸ் பெட்டியில் காசோலையைப் போடுகிறீர்கள் என்றால், Outstation Cheques எனக் குறிக்கப்பட்ட பெட்டியைப் பயன்படுத்தவும்.

 

மேலே உள்ள வழிமுறைகளைப் பின்பற்றத் தவறினால், காசோலை செயலாக்கப்படாமல் போகலாம், வங்கி அபராதமும் விதிக்கலாம்.

 

குறிப்பு: காசோலை வழங்கப்பட்டவுடன், ரீஃபண்ட் தேதியிலிருந்து 4 வேலை நாட்களுக்குள் ரீஃபண்ட் காசோலையின் டிராக்கிங் விவரங்களுடன் KP Racing System உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பும்.

 

 

அனைத்தும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன, விதிமுறைகள் & நிபந்தனைகள் பொருந்தும் ***